NATIONAL MINE ACTION CENTRE (NMAC)

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை

கண்ணிவெடி செயற்பாட்டு பங்காண்மையாளர்கள்

Mine action work in Sri Lanka is funded by

கண்ணிவெடி பரிந்துரை குழு (MAG) ஐக்கிய இராச்சியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள
மனிதாபிமான மற்றும் பரிந்துரைக்கும் அமைப்பாகும். இது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட
பிரதேசங்களிலிருந்து வெடிக்காத குண்டுகள், கொத்தணி வெடிபொருட்கள், நிலக்கண்ணிவெடிகள்
என்பவற்றைக் கண்டுபிடிப்பதோடு அவற்றை அகற்றுகிறது மற்றும் அழிக்கிறது.

1997ஆம் ஆண்டு
ஆயுபு அதன் நிலக்கண்ணிவெடிகளை தடைசெய்யும் வகிபாகத்திற்காக நோபல் சமாதான
பரிசைப் பகிர்ந்து கொண்டது. இந்த அமைப்பு அகிலத்தில் 26 நாடுகளில் இயங்குகின்றது.

ஆயுபு இலங்கையில் 2002ஆம் ஆண்டிலிருந்து வேலை செய்கிறது. கண்ணிவெடி அகற்றும்
பணிகள் தற்பொழுது மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை,
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகின்றன.
அவர்களுடைய தொழில்நுட்ப நிபுணர்கள் அணிகளும்சமூக தொடர்பு அணிகளும்
கண்ணிவெடியினால் கறைபடிந்த காணியை அடையாளம் காண்பதற்கும் முறையான தொழில்நுட்ப
ஆய்வை மேற்கொள்ளுவதற்கும் ஊர் மக்களுடன் நெருக்கமாக கூட்டாகச் சேர்ந்து
செயலாற்றுகின்றனர்.

MAG இன் வதிவிட அலுவலகம் கொழும் பில் இருப்பதோடு, அதன் மத்திய
செயற்பாட்டு (MAG) தளம் வவுனியாவில் இயங்குகின்றது. இந்த அமைப்பு தற்பொழுது 1000இற்கு
மேற்பட்ட பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. அவர்களில் மொத்த பணிப்படை மூன்றில்
இரண்டு பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும ; கண்ணிவெடி அகற்றும் பெரும் குழுவைக்
கொண்டுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணிப்படையில் 22மூ பெண்கள் பணியாற்றுகின்றனர்.

2023-2027 தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு பூர்த்தி மூலோபாயத்தின் மூலோபாய நோக்கம ; 4
2020-2021ஆம் ஆண்டில் பணியாளர் நிலைமாற்ற மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டு
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மிகையாக இருக்கும் பட்சத்தில் அவர்களை மாற்று
பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு
MAG இனால் விருத்தி செய்யப்பட்டது.

HALO நம்பிக்கைப் பொறுப்பு 1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தை தளமாகக்
கொண்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அமைப்பாகும். இது உலகளாவிய ரீதியில் 24
நாடுகளிலும் ஆள்புலங்களிலும் இயங்குகின்றது. இந்த அமைப்பு ஆய்வுகளை நடத்துவதற்கும்
கண்ணிவெடி அகற்றுவதற்கும் மற்றும் கண்ணிவெடி ஆபத்து பற்றிய கல்வியை வழங்குவதற்கும்
உள்ளூர் பணியாட் தொகுதியினரை பணியில் அமர்த்தியுள்ளது.

இந்த அமைப்பு 2002ஆம் ஆண்டு இலங்கையில் அதன் பணிகளை ஆரம்பித்ததோடு, தற்பொழுது
வட மாகாணத்தில் கண்ணிவெடியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து 1,100இற்கு மேற்படட
பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இந்தப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர்
பெண்களாவர். அவர்களில் அநேகமானவர்கள் தலைமை வகித்து செயலாற்றுகின்றனர்.
ஆரம்பத்தில் 2002 மற்றும ; 2008ஆம் ஆண்டுக்கு இடையில் அதன் முயற்சி யாழ்ப்பாணத்தின் மீது
கவனம் செலுத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்ததை அடுத்து HALO
அதன் நடவடிக்கைகளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியது.
இந்த விரிவாக்கம் உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீளக் குடியேறியவர்களுக்கு (IDP) உதவுவதை
நோக்கமாகக் கொண்டிருந்தது. மத்திய செயற்பாட்டு தளம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது.

சமூக ஐக்கியத்திற்கான டெல்வொன் உதவி (DASH) அமைப்பு இலங்கையில் இலாப நோக்கற்ற
கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமாகும்.

இந்தப் பணிப்படையில் மனிதாபிமான
கண்ணிவெடி அகற்றும் துறையில் அநுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த இலங்கை
பணியாளர்கள் அடங்கியுள்ளனர்.

Danish கண்ணிவெடி அகற்றும் குழுவின் உதவியுடன் (DASH)
னுயுளுர் அதன் செயற்பாடுகளை 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பித்தது. தற்பொழுது
தலைமை தாங்கி செயலாற்றும் 23மூ பெண்கள் உட்பட 400இற்கு மேற்பட்ட பணியாளர்கள்
சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பு இலங்கையில் வட மாகாணத்தில்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இயங்குகின்றது. DASH இன் தலைமை
அலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளதோடு, அதன் வெளிக்கள அலுவலகம் கிளிநொச்சியில்
அமைந்துள்ளது. மேலும் பரந்தன் (கிளிநொச்சி), மான்குளம் மற்றும் வெலிஒய (முல்லைத்தீவு)
ஆகிய மூன்று முகாம்களை நடத்துகிறது.

Skavita மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணத் திட்டம் (SHARP) இலங்கையின் இரண்டாவது தேசிய கண்ணிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமாக உள்ளது, இது ஜப்பான் அரசாங்கத்தின் (GGP) ஆதரவுடன் 2016 இல் நடவடிக்கைகளைத் தொடங்குகிறது.

ஆரம்பத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்திய SHARP பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தை உள்ளடக்கிய தனது முயற்சிகளை விரிவுபடுத்தியது.

ஷார்ப் தற்போது 200க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது, அவர்களில் 18% பேர் பெண்கள்.

பிரதிநிதி அலுவலகம் கொழும்பிலும் மத்திய செயற்பாட்டுத் தளம் பளையிலும் அமைந்துள்ளது.

The

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் (GICHD) கண்ணிவெடிகள், கொத்து வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்து இருப்புக்களை மையமாகக் கொண்டு, வெடிக்கும் ஆயுதங்களால் ஏற்படும் சமூகங்களுக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்கும் நோக்கில் செயல்படுகிறது.

தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகள், நன்கொடையாளர்கள், ஐக்கிய நாடுகள் சபை, பிற சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் நலனுக்காக இந்தத் துறையை மேம்படுத்தவும், தொழில் ரீதியாக மேம்படுத்தவும் மையம் உதவுகிறது.

இலங்கையில், 2023-2027 காலப்பகுதிக்கான தேசிய கண்ணிவெடி நடவடிக்கை நிறைவு மூலோபாயத்தின் மேம்பாடு,  அமுலாக்கம் மற்றும் மதிப்பாய்வு ஆகியவற்றில் NMACக்கு தொடர்ந்து ஆதரவளிக்க GICHD உறுதிபூண்டுள்ளது.

1992 இல் தொடங்கப்பட்டது, கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கான சர்வதேச பிரச்சாரம் (ICBL) என்பது அரசு சாரா நிறுவனங்களின் உலகளாவிய வலையமைப்பாகும், இது சுமார் 100 நாடுகளில் செயலில் உள்ளது, இது தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் விழிப்புணர்வையும் ஆதரவாளர்களையும் எழுப்புகிறது.

2011 ஆம் ஆண்டில், ICBL கிளஸ்டர் ம்யூனிஷன் கூட்டணியுடன் ஒன்றிணைந்து ICBL-CMC ஆனது - கண்ணிவெடிகள் மற்றும் கிளஸ்டர் வெடிமருந்துகள் பற்றிய இரண்டு தனித்தனி பிரச்சாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பு. கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான இலங்கை பிரச்சாரம் / நிராயுதபாணியாக்கம் மற்றும் அபிவிருத்திக்கான மன்றம் ICBL இன் உறுப்பினராக உள்ளது.

Skip to content